'விபத்தில் சிக்கியவர்களின் தற்போதைய நிலை என்ன..?" உருக்கமான தகவலை வெளியிட்ட வைத்தியர்


 
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு நடந்த கோர பேருந்து விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை தற்போது சீராகி வருவதாகவும், அவர்களில் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.

 ஊடகங்களுக்குப் பேட்டியளித்த வைத்தியர், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற தங்களை அர்ப்பணித்த அனைவரும் தங்கள் தியாகங்களால் இந்த உயிர்களை காப்பாற்ற முடிந்ததில் மகிழ்ச்சியடையலாம் என்றும் தெரிவித்தார்.

 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற வைத்தியக் குழுவினர், இராணுவம் மற்றும் எல்ல பிரதேசவாசிகள் வழங்கிய ஒத்துழைப்புக்கு இதனபோது அவர் தனது நன்றிகளை தெரிவித்தார்.

"அனைத்து நோயாளிகளின் உயிருக்கு இருந்த ஆபத்து தற்போது நீங்கியுள்ளது. அவசர அறுவை சிகிச்சைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் தற்போது அந்தந்த வார்டுகளில் சிகிச்சை பெறுகின்றனர். குறிப்பாக, குழந்தைகளின் நிலைமை நன்றாக உள்ளது. அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐஊரு) உள்ள இரண்டு நோயாளிகளுக்கும் பெரிய ஆபத்து இல்லை. இந்த உயிர்களைக் காப்பாற்ற அனைவரும் கடினமாக உழைத்தனர். இதில் நாம் அனைவரும் மகிழ்ச்சியடையலாம்"